உள்ளடக்கத்துக்குச் செல்

மின் சுருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மின்னணு சுருட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Photo of device
யூ.எஸ்.பி மின்னேற்றியைப் பயன்படுத்தி மீள்நிரப்பு செய்யக்கூடிய, மேலும் தேவைப்படும்பொழுது கழற்றி மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்ட புகையிலை சுருட்டைப் போன்ற முதல் தலைமுறை மின்-சுருட்டு
Photo of devices
பல்வேறு வகையான மின்-சுருட்டுகள், ஒற்றைப் பயன்பாடு இ-சிகரெட், மீள்நிரப்பு(ரீசார்ஜிபிள்) இ-சிகரெட், நடுத்தர அளவிலான தொட்டி சாதனம், பெரிய அளவிலான தொட்டி சாதனங்கள், இ-சிகார் மற்றும் இ-பைப்
புதிய தலைமுறை இ-சுருட்டுகள்

மின் சுருட்டு (e-cigarette) அல்லது உள்ளிழுத்தல் (vape) என்பது புகையிலை புகைப்பதை உருவகப்படுத்தும் ஒரு சாதனம் ஆகும். இது ஒரு அணுவாக்கி, மின்கலம் போன்ற சக்தி மூலத்தையும், திரவத்தால் நிரப்பப்பட்ட கெட்டி அல்லது தொட்டி போன்ற கொள்கலனையும் கொண்டுள்ளது. புகைக்கு பதிலாக, பயனர் நீராவியை உள்ளிழுக்கிறார். [1] எனவே, மின்-சுருட்டு பயன்படுத்துவது பெரும்பாலும் " உள்ளிழுத்தல் " என்று அழைக்கப்படுகிறது. [2] அணுவாக்கி என்பது ஒரு வெப்பமூட்டும் உறுப்பு ஆகும், இது மின்-திரவ எனப்படும் திரவக் கரைசலை ஆவியாக்குகிறது, [3] இது சிறிய நீர்த்துளிகள், நீராவி மற்றும் காற்றின் நுண்ணிய துகளில் (ஏரோசோலில்) விரைவாக குளிர்கிறது. [4] மின்னணு-சுருட்டுகள் உறிஞ்சுதல் (pup) அல்லது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.[2] [5] சில பாரம்பரிய சுருட்டுகள் போலவே இருக்கும், [2] [6] மற்றும் பெரும்பாலான வகைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. [8] நீராவி முக்கியமாக புரோப்பிலீன் கிளைகோல் மற்றும்/அல்லது கிளிசரின், பொதுவாக நிகோடின் மற்றும் சுவையூட்டல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பயனர் நடத்தை உட்பட பல விஷயங்களைப் பொருத்து அதன் சரியான கலவை மாறுபடும்.

புகைபிடிப்பதைவிட உள்ளிழுத்தல் மிகவும் குறைவான தீங்கு விளைவிக்கும், ஆனால் இதுவும் தீங்கு விளைவிக்க கூடியவையாகும்.[9][10] [11] சுருட்டு புகையைவிட மின்-சுருட்டு ஆவியில் குறைவான நச்சுகள் உள்ளன. சுருட்டு புகையில் இல்லாத வேறுசில தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தடயங்கள் இதில் உள்ளன. [11]

நிகோடின் மிகவும் அடிமையாக்கும் பொருளாகும்.[12] [13] [14] நிக்கோடினை உட்கொள்ளும் பயனர்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நிக்கோடினைச் சார்ந்து இருக்கிறார்கள். [15] இன்றையளவில் நீண்ட காலத்திற்கு மின்-சுருட்டுகள் எவ்வளவு தீங்கு விளைவிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியாது [16] [17] ஏனென்றால், பலர் புகைபிடிக்கும் போது இருமுறைகளையும் பின்பற்றுவதால் வழமையான புகைபிடிப்பதன் விளைவுகளிலிருந்து மின்னணு முறையில் புகைப்பிடிப்பதன் விளைவுகளைப் பிரிப்பது கடினம். [note 1] [18] மின்-சுருட்டுகள் போதுமான அளவு அல்லது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படவில்லை.[19] [20] [21]

புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட நிகோடின் மாற்று சிகிச்சையுடன் (NRT) இ-சுருட்டு பயன்படுத்துவது அதிக விலகல் விகிதத்திற்கு வழிவகுக்கிறது.[22] [23] மருத்துவ உதவியின்றி புகைபிடிப்பதை நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு, ஆதாரங்கள் தரம் குறைவாக இருப்பதால், மின்-சுருட்டு வெளியேறும் விகிதத்தை உயர்த்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. [24]

கட்டுமானம்

[தொகு]
The first image is displaying an exploded view of an e-cigarette with a transparent clearomizer and changeable dual-coil head.
வெளிப்படையான கிளியோமைசர் மற்றும் மாற்றக்கூடிய இரட்டை காயில் தலையுடன் கூடிய மின்ன்னு-சுருட்டின் விரிவான தோற்றம். இந்த மாதிரியுரு பரந்த அளவிலான அமைப்புகளை அனுமதிக்கிறது.

ஒரு மின்னணு சுருட்டு ஒரு அணுவாக்கி, பேட்டரி போன்ற சக்தி மூலத்தையும், மின் திரவத்திற்கான கொள்கலனையும் கொண்டுள்ளது.

மின்-சுருட்டுகள் காலப்போக்கில் மேம்பட்டுள்ளன, மேலும் வெவ்வேறு வடிவமைப்புகள் தலைமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. முதல் தலைமுறை மின்-சுருட்டுகள் பாரம்பரிய சுருட்டுகளைப் போல தோற்றமளிக்கின்றன, மேலும் அவை "சிகாலிக்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன. [25] இரண்டாம் தலைமுறை சாதனங்கள் பெரியதாகவும், பாரம்பரிய சுருட்டுகளைப் போல குறைவாகவும் இருக்கும்.[26] மூன்றாம் தலைமுறை சாதனங்களில் மெக்கானிக்கல் மோட்ஸ் மற்றும் மாறி மின்னழுத்தம் சாதனங்கள் ஆகியவை அடங்கும்.[25] நான்காவது தலைமுறையில் 1 ஓம்க்கும் குறைவான மின் எதிர்ப்பைக் கொண்டிருக்கும், மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.[27] முந்தைய தலைமுறைகளில் காணப்படும் நிகோடினைக் காட்டிலும், புரோட்டானேட்டட் நிகோடினைப் பயன்படுத்தும் பாட் மோட் சாதனங்களும் உள்ளன, அவை அதிக நிகோடினை வழங்குகிறது.[28] [29]

மின் திரவம்

[தொகு]

இ-சுருட்டு போன்ற நீராவி பொருட்களில் பயன்படுத்தப்படும் கலவை மின் திரவம் என்று அழைக்கப்படுகிறது.[30] மின் திரவ சூத்திரங்கள் பரவலாக வேறுபடுகின்றன. [31] ஒரு பொதுவான மின்-திரவமானது புரோபிலீன் கிளைகோல் மற்றும் கிளிசரின் (95%) மற்றும் சுவைகள், நிகோடின் மற்றும் பிற சேர்க்கைகள் (5%) ஆகியவற்றால் ஆனது.[32] [33] சுவைகள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ, [31] அல்லது கரிமமாகவோ இருக்கலாம். பார்மால்டிஹைட் மற்றும் உலோக நானோ துகள்கள் போன்ற 80 க்கும் மேற்பட்ட தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மின் திரவங்களில் தடய அளவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. [34] பல மின்-திரவ உற்பத்தியாளர்கள் உள்ளனர், [35] மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட சுவைகள் உள்ளன. [36]

பெரும்பாலான நாடுகள் மின் திரவங்களில் என்ன இருக்க வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்துகின்றன. அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கட்டாய உற்பத்தித் தரநிலைகள் [37] மற்றும் அமெரிக்க மின் திரவ உற்பத்தித் தரநிலைகள் சங்கம் (AEMSA) பரிந்துரைத்த உற்பத்தித் தரநிலைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகள் EU புகையிலை தயாரிப்புகள் ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன. [38]

பிரபலம்

[தொகு]
வேப்பர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் மதிப்பிடப்பட்ட போக்குகள்

2003 இல் சந்தையில் நுழைந்ததிலிருந்து, மின்-சுருட்டு பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளது.[39] [40] [41] 2011 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 7 மில்லியன் வயதுவந்த மின்-சிகரெட் பயனர்கள் இருந்தனர், 1.1 பில்லியன் சிகரெட் புகைப்பவர்களுடன் ஒப்பிடும்போது 2020 இல் 68 மில்லியனாக அதிகரித்தது. [42] 2021 இல் மின்-சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 82 மில்லியனாக அதிகரித்தது. [43] இந்த அதிகரிப்புக்கு காரணமாக இலக்கு சந்தைப்படுத்தல், வழக்கமான சுருட்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலை மற்றும் புகையிலையுடன் ஒப்பிடும்போது மின்-சுருட்டுகளின் சிறந்த பாதுகாப்பு சுயவிவரம் ஆகியவை கூறப்படுகிறது. [44] சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மின்-சிகரெட் பயன்பாடு அதிகமாக உள்ளது. சீனாவில் அதிக பயனர்கள் உள்ளனர்.[5] [45]

குறிப்புகள்

[தொகு]
  1. "Once again, there is a strong potential for confounding, such that comparisons of dual users with smokers who do not use e-cigarettes will not yield meaningful causal estimates"[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cheng, T. (2014). "Chemical evaluation of electronic cigarettes". Tobacco Control 23 (Supplement 2): ii11–ii17. doi:10.1136/tobaccocontrol-2013-051482. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-4563. பப்மெட்:24732157. 
  2. 2.0 2.1 2.2 Orellana-Barrios, Menfil A.; Payne, Drew; Mulkey, Zachary; Nugent, Kenneth (2015). "Electronic cigarettes-a narrative review for clinicians". The American Journal of Medicine 128 (7): 674–81. doi:10.1016/j.amjmed.2015.01.033. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9343. பப்மெட்:25731134. 
  3. Weaver, Michael; Breland, Alison; Spindle, Tory; Eissenberg, Thomas (2014). "Electronic Cigarettes". Journal of Addiction Medicine 8 (4): 234–240. doi:10.1097/ADM.0000000000000043. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-0620. பப்மெட்:25089953. 
  4. David, Grégory; Parmentier, Evelyne A.; Taurino, Irene; Signorell, Ruth (December 2020). "Tracing the composition of single e-cigarette aerosol droplets in situ by laser-trapping and Raman scattering". Scientific Reports 10 (1): 7929. doi:10.1038/s41598-020-64886-5. பப்மெட்:32404884. Bibcode: 2020NatSR..10.7929D. 
  5. 5.0 5.1 Rahman, Muhammad; Hann, Nicholas; Wilson, Andrew; Worrall-Carter, Linda (2014). "Electronic cigarettes: patterns of use, health effects, use in smoking cessation and regulatory issues". Tobacco Induced Diseases 12 (1): 21. doi:10.1186/1617-9625-12-21. பப்மெட்:25745382. Rahman, Muhammad; Hann, Nicholas; Wilson, Andrew; Worrall-Carter, Linda (2014). "Electronic cigarettes: patterns of use, health effects, use in smoking cessation and regulatory issues". Tobacco Induced Diseases. 12 (1): 21. doi:10.1186/1617-9625-12-21. PMC 4350653. PMID 25745382.
  6. Pepper, J. K.; Brewer, N. T. (2013). "Electronic nicotine delivery system (electronic cigarette) awareness, use, reactions and beliefs: a systematic review". Tobacco Control 23 (5): 375–384. doi:10.1136/tobaccocontrol-2013-051122. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-4563. பப்மெட்:24259045. 
  7. 7.0 7.1 Drope, Jeffrey; Cahn, Zachary; Kennedy, Rosemary; Liber, Alex C.; Stoklosa, Michal; Henson, Rosemarie; Douglas, Clifford E.; Drope, Jacqui (November 2017). "Key issues surrounding the health impacts of electronic nicotine delivery systems (ENDS) and other sources of nicotine". CA: A Cancer Journal for Clinicians 67 (6): 449–471. doi:10.3322/caac.21413. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-9235. பப்மெட்:28961314. 
  8. "Most ENDS consist of a rechargeable, battery-operated heating element and a replaceable or refillable cartridge for the e-liquid. An atomizer heats the liquid in the cartridge to convert it into an aerosol, which is then inhaled by the user. Most of these products are rechargeable, but some are disposable."[7]
  9. Health and Care Excellence, The National Institute for (30 November 2021). "Recommendations on treating tobacco dependence Tobacco: preventing uptake, promoting quitting and treating dependence. Guidance NICE". www.nice.org.uk. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022. use of e‑cigarettes is likely to be substantially less harmful than smoking
  10. "Comparison of health risks between vaping and smoking". பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
  11. 11.0 11.1 Balfour, David J. K.; Benowitz, Neal L.; Colby, Suzanne M.; Hatsukami, Dorothy K.; Lando, Harry A.; Leischow, Scott J.; Lerman, Caryn; Mermelstein, Robin J. et al. (September 2021). "Balancing Consideration of the Risks and Benefits of E-Cigarettes". American Journal of Public Health 111 (9): 1661–1672. doi:10.2105/AJPH.2021.306416. பப்மெட்:34410826. பப்மெட் சென்ட்ரல்:8589069. https://ajph.aphapublications.org/doi/pdf/10.2105/AJPH.2021.306416. "Among potentially toxic substances common to both products, cigarette smoke generally contains substantially larger quantities than e-cigarette aerosol. However, e-cigarette aerosol contains some substances not found in cigarette smoke."". 
  12. "Policy on Electronic Nicotine Delivery Systems (ENDS)". American Academy of Pediatrics. 2020. https://www.aapd.org/media/policies_guidelines/p_electroniccig.pdf. பார்த்த நாள்: 13 November 2022. 
  13. "Position Statements on e-cigarettes". American Academy of Otolaryngology-Head and Neck Surgery (AAO-HNS). 21 April 2021. http://entnet.org/resource/position-statements-on-e-cigarettes/. பார்த்த நாள்: 13 November 2022. 
  14. Schraufnagel, Dean E.; Blasi, Francesco; Drummond, M. Bradley; Lam, David C. L.; Latif, Ehsan; Rosen, Mark J.; Sansores, Raul; Van Zyl-Smit, Richard (15 September 2014). "Electronic Cigarettes. A Position Statement of the Forum of International Respiratory Societies". American Journal of Respiratory and Critical Care Medicine 190 (6): 611–618. doi:10.1164/rccm.201407-1198PP. பன்னாட்டுத் தர தொடர் எண்:1073-449X. பப்மெட்:25006874. https://www.atsjournals.org/doi/full/10.1164/rccm.201407-1198PP. பார்த்த நாள்: 13 November 2022. 
  15. Miyasato, K. (March 2013). "[Psychiatric and psychological features of nicotine dependence]" (in ja). Nihon Rinsho. Japanese Journal of Clinical Medicine 71 (3): 477–481. பப்மெட்:23631239. 
  16. Marques, Patrice; Piqueras, Laura; Sanz, Maria-Jesus (December 2021). "An updated overview of e-cigarette impact on human health". Respiratory Research 22 (1): 151. doi:10.1186/s12931-021-01737-5. பப்மெட்:34006276. ""the safety of e-cigarette consumption and its potential as a smoking cessation method remain controversial due to limited evidence...the potential long-term effects of e-cigarette consumption have been scarcely investigated."". 
  17. Walley, Susan C.; Wilson, Karen M.; Winickoff, Jonathan P.; Groner, Judith (1 June 2019). "A Public Health Crisis: Electronic Cigarettes, Vape, and JUUL". Pediatrics 143 (6): e20182741. doi:10.1542/peds.2018-2741. பப்மெட்:31122947. ""Because e-cigarettes have only been marketed for ~10 years... scientific data are limited and will continue to emerge. Because e-cigarette solutions and emissions have been shown to contain nicotine and many of the same harmful toxicants and carcinogens as cigarettes, it is reasonable to assume that there is the potential for similar health effects for e-cigarette use, particularly with emerging data of tobacco toxicant exposure found among e-cigarette users."". 
  18. Kim, Sooyong; Selya, Arielle S (12 June 2020). "The Relationship Between Electronic Cigarette Use and Conventional Cigarette Smoking Is Largely Attributable to Shared Risk Factors". Nicotine & Tobacco Research 22 (7): 1123–1130. doi:10.1093/ntr/ntz157. பப்மெட்:31680169. ""past research remains inconclusive due to heavy confounding between cigarette and e-cigarette use"". 
  19. Gotts, Jeffrey E; Jordt, Sven-Eric; McConnell, Rob; Tarran, Robert (30 September 2019). "What are the respiratory effects of e-cigarettes?". BMJ 366: l5275. doi:10.1136/bmj.l5275. பப்மெட்:31570493. ""We reiterate that, to date, no long term vaping toxicological/safety studies have been done in humans; without these data, saying with certainty that e-cigarettes are safer than combustible cigarettes is impossible."". 
  20. Benowitz, Neal L.; Burbank, Andrea D. (August 2016). "Cardiovascular toxicity of nicotine: Implications for electronic cigarette use". Trends in Cardiovascular Medicine 26 (6): 515–523. doi:10.1016/j.tcm.2016.03.001. பப்மெட்:27079891. ""It is difficult to distinguish the independent roles of nicotine vs tobacco combustion products in cigarette smokers because all smokers are exposed to both."". 
  21. Bals, Robert; Boyd, Jeanette; Esposito, Susanna; Foronjy, Robert; Hiemstra, Pieter; Jiménez-Ruiz, Carlos A.; Katsaounou, Paraskevi; Lindberg, Anne et al. (February 2019). "Electronic cigarettes: a task force report from the European Respiratory Society". European Respiratory Journal 53 (2): 1801151. doi:10.1183/13993003.01151-2018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0903-1936. பப்மெட்:30464018. ""The long-term effects of ECIG use are unknown, and there is therefore no evidence that ECIGs are safer than tobacco in the long term. Based on current knowledge, negative health effects cannot be ruled out."". 
  22. Hartmann-Boyce, J; Lindson, N; Butler, AR; McRobbie, H; Bullen, C; Begh, R; Theodoulou, A; Notley, C et al. (17 November 2022). "Electronic cigarettes for smoking cessation.". The Cochrane Database of Systematic Reviews 2022 (11): CD010216. doi:10.1002/14651858.CD010216.pub7. பப்மெட்:36384212. 
  23. Hartmann-Boyce, Jamie; McRobbie, Hayden; Butler, Ailsa R.; Lindson, Nicola; Bullen, Chris; Begh, Rachna; Theodoulou, Annika; Notley, Caitlin et al. (14 September 2021). "Electronic cigarettes for smoking cessation". The Cochrane Database of Systematic Reviews 9 (11): CD010216. doi:10.1002/14651858.CD010216.pub6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:34519354. 
  24. Hedman, L; Galanti, MR; Ryk, L; Gilljam, H; Adermark, L (13 October 2021). "Electronic cigarette use and smoking cessation in cohort studies and randomized trials: A systematic review and meta-analysis". Tobacco Prevention and Cessation (European Network for Smoking and Tobacco Prevention) 7 (62): 62. doi:10.18332/tpc/142320. பப்மெட்:34712864. 
  25. 25.0 25.1 Farsalinos KE; Spyrou A; Tsimopoulou K; Stefopoulos C; Romagna G; Voudris V (2014). "Nicotine absorption from electronic cigarette use: Comparison between first and new-generation devices". Scientific Reports 4: 4133. doi:10.1038/srep04133. பப்மெட்:24569565. Bibcode: 2014NatSR...4E4133F. 
  26. Hayden McRobbie (2014). "Electronic cigarettes" (PDF). National Centre for Smoking Cessation and Training. pp. 1–16. Archived from the original (PDF) on 2022-04-23. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
  27. Konstantinos Farsalinos (2015). "Electronic cigarette evolution from the first to fourth generation and beyond" (PDF). Global Forum on Nicotine. p. 23. Archived from the original (PDF) on 8 July 2015.
  28. Weedston, Lindsey (8 April 2019). "FDA To Investigate Whether Vaping Causes Seizures". The Fix. 
  29. Barrington-Trimis, Jessica L.; Leventhal, Adam M. (2018). "Adolescents' Use of "Pod Mod" E-Cigarettes — Urgent Concerns". New England Journal of Medicine 379 (12): 1099–1102. doi:10.1056/NEJMp1805758. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:30134127. 
  30. Jankowski, Mateusz; Brożek, Grzegorz; Lawson, Joshua; Skoczyński, Szymon; Zejda, Jan (2017). "E-smoking: Emerging public health problem?". International Journal of Occupational Medicine and Environmental Health 30 (3): 329–344. doi:10.13075/ijomeh.1896.01046. பன்னாட்டுத் தர தொடர் எண்:1232-1087. பப்மெட்:28481369. 
  31. 31.0 31.1 Bertholon, J.F.; Becquemin, M.H.; Annesi-Maesano, I.; Dautzenberg, B. (2013). "Electronic Cigarettes: A Short Review". Respiration 86 (5): 433–8. doi:10.1159/000353253. பன்னாட்டுத் தர தொடர் எண்:1423-0356. பப்மெட்:24080743. 
  32. England, Lucinda J.; Bunnell, Rebecca E.; Pechacek, Terry F.; Tong, Van T.; McAfee, Tim A. (2015). "Nicotine and the Developing Human". American Journal of Preventive Medicine 49 (2): 286–93. doi:10.1016/j.amepre.2015.01.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0749-3797. பப்மெட்:25794473. 
  33. Jimenez Ruiz, CA; Solano Reina, S; de Granda Orive, JI; Signes-Costa Minaya, J; de Higes Martinez, E; Riesco Miranda, JA; Altet Gómez, N; Lorza Blasco, JJ et al. (August 2014). "The electronic cigarette. Official statement of the Spanish Society of Pneumology and Thoracic Surgery (SEPAR) on the efficacy, safety and regulation of electronic cigarettes". Archivos de Bronconeumologia 50 (8): 362–7. doi:10.1016/j.arbres.2014.02.006. பப்மெட்:24684764. 
  34. Thirión-Romero, Ireri; Pérez-Padilla, Rogelio; Zabert, Gustavo; Barrientos-Gutiérrez, Inti (2019). "Respiratory Impact of Electronic Cigarettes and Low-Risk Tobacco". Revista de investigación Clínica 71 (1): 17–27. doi:10.24875/RIC.18002616. பன்னாட்டுத் தர தொடர் எண்:0034-8376. பப்மெட்:30810544. 
  35. John Reid Blackwell (7 June 2015). "Avail Vapor offers glimpse into the 'art and science' of e-liquids". Richmond Times-Dispatch.
  36. Henry, Travis S.; Kligerman, Seth J.; Raptis, Constantine A.; Mann, Howard; Sechrist, Jacob W.; Kanne, Jeffrey P. (2020). "Imaging Findings of Vaping-Associated Lung Injury". American Journal of Roentgenology 214 (3): 498–505. doi:10.2214/AJR.19.22251. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-803X. பப்மெட்:31593518. 
  37. "Manufacturing". United States Food and Drug Administration. 12 August 2016.
  38. Famele, M.; Ferranti, C.; Abenavoli, C.; Palleschi, L.; Mancinelli, R.; Draisci, R. (2014). "The Chemical Components of Electronic Cigarette Cartridges and Refill Fluids: Review of Analytical Methods". Nicotine & Tobacco Research 17 (3): 271–279. doi:10.1093/ntr/ntu197. பன்னாட்டுத் தர தொடர் எண்:1462-2203. பப்மெட்:25257980. 
  39. Rom, Oren; Pecorelli, Alessandra; Valacchi, Giuseppe; Reznick, Abraham Z. (2014). "Are E-cigarettes a safe and good alternative to cigarette smoking?". Annals of the New York Academy of Sciences 1340 (1): 65–74. doi:10.1111/nyas.12609. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8923. பப்மெட்:25557889. Bibcode: 2015NYASA1340...65R. 
  40. Bourke, Liam; Bauld, Linda; Bullen, Christopher; Cumberbatch, Marcus; Giovannucci, Edward; Islami, Farhad; McRobbie, Hayden; Silverman, Debra T. et al. (2017). "E-cigarettes and Urologic Health: A Collaborative Review of Toxicology, Epidemiology, and Potential Risks". European Urology 71 (6): 915–923. doi:10.1016/j.eururo.2016.12.022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0302-2838. பப்மெட்:28073600. http://dspace.stir.ac.uk/bitstream/1893/24937/1/E-cigarettes_review%20091216.pdf. 
  41. Schraufnagel, Dean E.; Blasi, Francesco; Drummond, M. Bradley; Lam, David C. L.; Latif, Ehsan; Rosen, Mark J.; Sansores, Raul; Van Zyl-Smit, Richard (2014). "Electronic Cigarettes. A Position Statement of the Forum of International Respiratory Societies". American Journal of Respiratory and Critical Care Medicine 190 (6): 611–618. doi:10.1164/rccm.201407-1198PP. பன்னாட்டுத் தர தொடர் எண்:1073-449X. பப்மெட்:25006874. https://figshare.com/articles/journal_contribution/10758143. 
  42. Shapiro, Harry (2020). "Burning Issues: The Global State of Tobacco Harm Reduction".
  43. "82 million vapers worldwide in 2021: the GSTHR estimate". Global State of Tobacco Harm Reduction. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.
  44. Camenga, Deepa R.; Klein, Jonathan D. (2016). "Tobacco Use Disorders". Child and Adolescent Psychiatric Clinics of North America 25 (3): 445–460. doi:10.1016/j.chc.2016.02.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:1056-4993. பப்மெட்:27338966. 
  45. Cai, Hua; Wang, Chen (2017). "Graphical review: The redox dark side of e-cigarettes; exposure to oxidants and public health concerns". Redox Biology 13: 402–406. doi:10.1016/j.redox.2017.05.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:2213-2317. பப்மெட்:28667909. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_சுருட்டு&oldid=4109412" இலிருந்து மீள்விக்கப்பட்டது